Police Department News

தர்மபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ- சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி. சாந்தி IAS அவர்கள் தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்ப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அரசு இ சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் தமிழ்நாடு மகளீர் நல மேம்பாட்டு நிறுவனம் மீன் வளத்துறை மற்றும் கிராமபுற தொழில் முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும் மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாக வழங்கி வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழி வகை செய்யப்பட்டுள்ளன

இத்திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்க படுகின்றன. இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் இத்திட்டத்தினை பற்றிய கூடுதல் தகவல் பெறவும் இணைய வழியில் விண்ணப்பித்திடவும் https://www.tnesevai.tn. gov.in/ https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவும்

விண்ணப்பங்கள் 15/03/23 அன்று காலை 11.30. மணி முதல் 14/04/23. அன்று இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும் மேலும் விண்ணப்பதாரர்ருக்குறிய பயணர் பெயர் மற்றும் கடவுசொல் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக வழங்ப்படும் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் திருமதி. கி. சாந்தி IAS அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.