Police Department News

திண்டுக்கல் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி

செம்பட்டி அருகே வீரக்கல் பிரிவு தனியார் தோட்டத்தில் மரபு வழியில் ஆங்கில மருத்துவமின்றி வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் உட்பட குடும்பத்தினர் ஒன்று கூடும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை, மதுரை, கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பெங்களூர், கேரளா உட்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மருத்துவ அலுவலர் பரிந்துரையின்பேரில், வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தீஸ்வரி, சின்னாள பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில், நிகழ்ச்சிக்கு சின்னாளபட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்க ப்பட்டனர்.

சுமார் 3 மணி நேரம் குழந்தைகளுடன் கடும் வெயிலில் காத்திருந்த பெண்கள் அனுமதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனுமதி மறுத்ததால் போலீசாரை கண்டித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் செம்பட்டி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து சின்னாளப்பட்டி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அங்கு வந்திருந்த, பெண்கள் கூறுகையில், வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றிணையும் சங்கம விழா ஏற்கனவே கோயமுத்தூர், வடலூரில் நடத்தியுள்ளோம். அதேபோல இன்று செம்பட்டியில் ஏற்பாடு செய்திருந்தோம். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மரபு வழியில் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது சட்ட விரோதம் போல போலீசார் அனுமதி மறுத்து அனை வரையும் விரட்டியடித்தனர். மேலும் பச்சிளம் குழந்தைகளுடன் வெயிலில் நிற்க வைத்து அலைக்கழித்தனர். பொறுமை இழந்த நாங்கள் தங்களின் தனிமனித உரிமைக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.