விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும்தண்டனை,
பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை .
தருமபுரி மாவட்டம்
பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள வன பகுதிகளின் அருகில் உள்ள விளை நிலங்களில் அனுமதியின்றி மின் வேலிகள் அமைத்ததால் தொடர்ந்து காட்டுபன்றிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழந்து வந்தது.
இதனால் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மின்துறை, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, அதில் விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக கண்காணித்து சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும், 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க அறிவுறுத்தினார். விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தர்மபுரி மின் பகிர்மான மேற்பார்வையாளர் செல்வகுமார்,வெள்ளி சந்தை உதவி பொறியாளர் வனிதா தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் அழகுமணி, மோகன் குமார். உதவி பொறியாளர்கள் அருள்முருகன், திவாகர், சரவணன், செந்தில், சேகர், மற்றும் பாலக்கோடு வனகர் முருகானந்தம, வனகாப்பாளர்கள் பழனி, திலகா ஆகியோர் அடங்கிய குமுவினர் பாலக்கோடு, பென்னாகரம் வனசரகத்திற்க்குட்பட்ட மாரண்டஅள்ளி , சந்திராபுரம், அத்தி முட்லு, ஏரிபஞ்சப்பள்ளி, சீங்காடு, அத்திமுட்லு, பெரியூர், பிக்கிலி, சாஸ்திரமுட்லு, அத்திமுட்லு, கெண்டேயனஅள்ளி, கல்லாகரம், ஈச்சம்பள்ளம், பாறைக் கொட்டாய், காளி கவுண்டன்கொட்டாய் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியின்றி மின்வேலி அமைப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தண்டனைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும் யாரேனும் மின்வேலி அமைத்திருந்தால் அருகில் உள்ள மின் வாரியம் மற்றும் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டனர். மேலும் யானைகள் செல்லும் வழித்தடங்களில் கீழாக மின் கம்பிகள் உள்ள உயர் மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளை சரி செய்து, யானைகள் மின் கம்பங்களில் உராய்ந்து விபத்து ஏற்படாமல் இருக்க மின் கம்பங்களை சுற்றி முள்வேலி அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.