மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக தீ தொண்டு தினம்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் திரு. ந. விஜயகுமார் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட அலுவலர் திரு. செ. வினோத் மற்றும் மதுரை உதவி மாவட்ட அலுவலர் திரு.த.பாண்டி அவர்கள் பங்கேற்க்க மதுரை மாவட்ட அலுவலர் அலுவலக வளாகத்தில் 2023 ஏப்ரல் 14, ம் தேதி தீத்தொண்டு நாள் (நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை காப்பாற்ற வீர மரணமடைந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்திய அரசின் வழி காட்டுதலின்படி தீத்தொண்டு நாள் தினத்தின் கருப்பொருள் தீபாதுகாப்பு குறித்தான. விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும் Awareness in fire safety for growth of national infrastructure. (Agni) என்ற தலைப்பின் கீழ் அனுசரிக்கப்படுகிறது. 1944 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் தேதி பாம்பே விக்டோரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த SS Port Stikins என்ற சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 66 தீயணைப்பு வீரர்கள் தங்களின் இன்னுயிரை இழந்தனர் அந்த தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும்
ஏப்ரல் மாதம் 14 ம் தேதி தீதொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கலிலும் நேற்று தீதொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.