Police Department News

மனநலம் பாதிக்கப்பட்டவரை உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு

விருதுநகர் மாவட்டம் ஜமீன் செவல்பட்டியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 75 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், கடந்த 17.08.2019-ம் தேதியன்று கோவில்பட்டி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் தனியாக நின்றிருந்தார். அப்போது இரவு ரோந்து பணியிலிருந்த நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் திருமதி.சுகாதேவி அவர்கள் பெண்ணை மீட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அப்பெண்மணி குணமடைந்து தனது குடும்பத்தை பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அவரது உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபக்குமார் அவர்கள் 29.11.2019-ம் தேதியன்று அவரது உறவினர்களிடம் பத்திரமாக அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.