மக்கள் நீதி மன்றத்தின் மூலம் நிலுவையில் இருந்த 2219 வழக்குகள் முடிக்கப்பட்டன
மதுரை மாவட்டத்தில் தாக்கலாகும் வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை மேற்கொண்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்து நீதி மன்ற விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்பேரில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள காவலர்களுக்கு புலன் விசாரணை மேற்கொள்ளுதல் வழக்கு நாட்குறிப்பு எழுதுதல் போன்ற பயிற்சிகள் வழங்ஙப்பட்டது. அது போல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புலன்விசாரணை அதிகாரிகளுக்கு உதவும் பொருட்டு வழக்கு நாட் குறிப்பு தயார் செய்யும் குழு அமைக்கப்பட்டது. இன்நிலையில் கடந்த 11 ம் தேதி அன்று மதுரை மாவட்டம் குற்றவியல் நீதி மன்றங்களில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. இம்மக்கள் நீதி மன்றங்களின் மூலம் அதிகப்படியான வழக்குகளுக்கு தீர்வு காண மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்களின் அறிலுரைகளின்பேரில் மதுரை மாவட்டம் காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் மக்கள் நீதி மற்றத்தில் முடிக்க தகுதிவாய்ந்த வழக்குகள் அடையாலம் காணப்பட்டது. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட 158 இந்தியன் தண்டனைச் சட்ட வழக்குகள், 1320 மதுபான குற்ற வழக்குகள் 340 வாகன குற்ற வழக்குகள், 36 மோட்டார் வாகனச் சட்டத்தின்படியான வழக்குகள், மற்றும் 365 உள்ளூர், மற்றும் சிறப்பு சட்டத்தின் கீழான வழக்குகள் என மொத்தம் சுமார் 2219 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து 24,23,900/− ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு மேற்படி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. Oct