Police Department News

சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்

சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்

சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்றும் விதி தெரிந்தவன் வில்லங்மானவன் என்றும் சமுதாயம் பார்கின்ற நிலைக்கு சட்டத்தை பயன்படுத்தியவர்கள் தவறாக பயன்படுத்தி விட்டார்கள் உண்மையில் சண்டை போடவா சட்டம்?

நாட்டில் நடக்கும் செயல்கள் அனைத்தும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உறுவாக்கப்பட்ட தொகுப்புதான் சட்டம்

இதன் நோக்கத்திற்காக. சட்டம் என்பது எதை எதையெல்லாம் செய்யக்கூடாது, எதை எதையெல்லாம் செய்யனும் இதை செய்வதால் அல்லது செய்யாமல் இருப்பதால் அது எந்த விதத்தில் குற்றமாகும் என விளக்கம் தருவதுடன் அதற்கு என்ன தண்டனை என சொல்லுவதும் ஆகும் இப்படி செய்யப்பட்டதாக. சொல்லப்படும் செயல் குற்றமா தண்டனைக்குறியதா என்பதை விசாரிக்க அதாவது புகாரை பதிவு செய்தல் சாட்சிகளை விசாரித்தல் குற்றாம் சாட்டப்பட்டவரை பிணையில் விடுவித்தல் தண்டனை கொடுத்தல் அல்லது விடுதலை செய்தல் போன்ற பல வேறான செய்கைகளை எற்படுத்தப்பட்டதுதான் விதிகள்.

இன்னும் புரியும்படி கூற வேண்டுமானால் சட்டம் என்பது நமது உடம்பு இந்த உடம்பு வேலை செய்ய வேண்டுமானால் ஐம்புலன்கள் உள்பட அனைத்து உறுப்புகளும் தேவை அல்லவா?

இதுதான் விதிகள்

உடம்பு இயங்குவதற்கு எப்படி உறுப்புகள் தேவையோ அதே போல் சட்டத்திற்கு இயக்கம் கொடுப்பது விதிகள்தான்

எனவே எப்படி உறுப்பை உடம்பு என்று சொல்ல மாட்டோமோ அதே போல் தான் விதிகளை சட்டம் என்று சொல்லக்கூடாது.

இதன்படி பார்த்தால் குற்ற விசாரணை முறை சட்டத்தை குற்ற விசாரணை முறை விதிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.