பாலக்கோடு பேளாரஹள்ளி பஞ்சாயத்தில் கஞ்சா , குட்கா புழக்கமற்ற பகுதியாக அறிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம் பேச்சு .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி ஊராட்சிமன்றம் கஞ்சா , குட்கா புழக்கமற்ற பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
பாலக்கோடு ஒன்றியம் பேளாரஅள்ளி ஊராட்சிமன்றத்திலுள்ள 32 கிராமங்களிலும் முற்றிலும் கஞ்சா புழக்கமற்ற பகுதியாக கண்டறிந்து பேளாரஹள்ளி ஊராட்சியை கஞ்சா , குட்கா புழக்கமற்ற பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர்
போதைப் பழக்கம் அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் காரணமாகிறது.
கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் உள்ளிட்டவைகளின் பின்னனியில் போதைப் பழக்கம் முக்கிய காரனமாக உள்ளது.
போதை பழக்கத்திற்க்கு அடிமையானவர்கள் நாளடைவில் தீய செயல்களில் ஈடுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால்
குடும்பம் சீர்குலைந்து, எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விகுறியாகுவது மட்டுமன்றி,
சமுதாயமும் பாதிப்படைகிறது.
எனவே கஞ்சா மற்றும் குட்கா பயன்பாட்டை அறவே தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பொதுமக்கள் அனைவரும் மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் கஞ்சா ஒழிப்பு கஉறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்சியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து, இன்ஸ்பெக்டர் தவமணி, தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம், திமுக மத்தியஒன்றிய செயலாளர் முனியப்பன், ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.