பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்தால் – பொதுமக்கள் மூச்சுதிணறால் அவதி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேருராட்சியில் 15 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகளை நகர் பகுதியை ஒட்டியுள்ள எம்.செட்டிஅள்ளி ஊராட்சி சின்னசாமி கொட்டாய் பகுதியில் உள்ள பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் பல ஆண்டுகளாக 5 ஏக்கர் பரப்பளவில்
கொட்டப்பட்டு வருகின்றது.
டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படவதால் மலைபோல் சேர்ந்து உள்ளது.
கோடை வெயில் அதிகரித்து காணப்படும் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குப்பை கிடங்கிற்கு மர்ம நபர் தீ வைத்துள்ளனர். இந்த தீ மளமளவெள பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் பொதுமக்கள், தனியார் பள்ளி குழந்தைகள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் கண் எரிச்சல், மூச்சு தினறல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் சித்திரைக்கனி ஆகிேயாரிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக
அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.