மதுரையில் சாலை விதிகளை மீறி இயங்கிய வாகனங்களின் மீது 322 வழக்குகள் பதிவு போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரையில் விதி மீறி இயங்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை போலீஸ் கமிஷனர் J லோகநாதன் ஐபிஎஸ்., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி நேற்று 15/03/24 சாலை விதிமுறைகளை மீறி இயங்கி வரும் டாட்டா ஏஸ் வாகனங்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து மதுரையில் 10 இடங்களில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சிறப்பு வாகன சோதனையில்
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்தல் 15,
காப்பீடு செய்யாமை 21
குடிபோதையில் வாகன ஓட்டுதல் 5
அதிக உயரம் 37
சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல் 39
விளக்கு சம்பந்தமான குற்றங்கள் 8
குறைபாடு உடைய நம்பர் பிளேட்டுகள் 8
இதர வழக்குகள் 189.
ஆக மொத்தம் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக மொத்தம் ரூபாய் 2,68,500/- வசூல் செய்யப்பட்டது