மகேந்திரமங்கலம் நீலகிரியான் கொட்டாய் கிராமத்தில் கல்தடுக்கி கீழே விழுந்ததில் 6 ம் வகுப்பு மாணவன் பலி.
தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அடுத்த நீலகிரியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர் ராமசாமி இவர் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் சதீஷ் (வயது.17) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்ல பள்ளி வாகனத்தை நோக்கி வேகமாக ஓடி சென்றவர் சாலையில் கிடந்த கல் தடுக்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,
உடனடியாக அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கல் தடுக்கி கீழே விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.