பாப்பாரப்பட்டி அருகே
சந்துக்கடையில் மது விற்றவரின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்
மதுபாட்டில்களை உடைத்ததால் பரபரப்பு
பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட் டது பூதிநத்தம் கிராமம். இங்கு அதே கிராமத்தை சேர்ந்த பெருமான் மகன் ஜெயராமன் (வயது 30). இவர் தனது வீட் டில் சந்துக்கடை நடத்தி மது விற்பனை செய்து வந்தார். இதுதொடர்பாக கிராம மக்கள் கடந்த கிராமசபை
கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகத் திடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை.எதுவும் எடுக்கப்படவில்லை,
மேலும் சத்துக்கடையில் 24 மணி நேரமும் விற்பனை செய்வதால் கிராம மக்கள் வேலைக்குசென்று சம்பாதிக்கும் பணத்தை இழக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு மது விற்றவரின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வீட்டில் மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை எடுத்து வெளியில் எடுத்து வந்து வீட்டுவாசலில் கொட்டி உடைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்குவந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 224 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
மேலும் மது கடத்த பயன்படுத்திய ஒரு கார் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே சந்துக் கடை நடத்திய ஜெயராமன் மற்றும் கொல்லப்பட்டி
கிராமத்தை சேர்ந்த பொன்னப்பன் மகன் முருகேசன் (35) ஆகிய 2 பேர் மீது
வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெயராமன் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.