மக்கள் சேவையில் அபிராமபுரம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் திரு.சரவணகுமார் அவர்கள் (க்ரைம் பிரிவு)
மதிப்பிற்குரிய சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களது உத்தரவின்படி மதிப்பிற்குரிய J.C சுதாகர் IPS அவர்கள் தலைமையில் இரு சக்கர வாகன திருடர்களை பிடிக்குமாறு கிழக்கு மண்டல தனிப்படை தலைமை காவலர் திரு.சரவணகுமார் ( HC26286 ) அவர்களை நியமனம் செய்ததன் பேரில் திரு.சரவணகுமார் அவர்கள் கடந்த ஏழு வருடங்களாக சென்னையில் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் காணவில்லை
என்பதனை ஒவ்வொரு காவல்நிலையத்தின் புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியபோது முதலில் Egmore-ஐ சேர்ந்த காவலர் ஏட்டு M. குமார் அவர்கள் Royal Enfield -ஐ காணவில்லை என்று அளித்த புகாரை தொடர்ந்து மற்றும் மக்கள் அளித்த புகாரின் பேரில் 6- August -2020 அன்றிலிருந்து ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்க்கும் போது வெவ்வேறு வகையின் திருடர்களின் திருட்டை கணக்கெடுத்து பார்த்தபோது இது ஒரு நெட்வொர்க் மூலம் இயங்குகிறது என்பதை ஊர்ஜிதம் செய்ததன் பேரில் முதலில் சென்னையில் வாகனங்கள் காணாமல் போன இடத்தில் எடுத்த புகைப்பட காட்சிகள் மூலமாகவும் அவர்கள் பயன்படுத்திய வாட்ஸ்அப் அழைப்புகள் மூலமாகவும் திரு.சரவணகுமார் அவர்கள் தனிப்பட்ட கணிப்பின்படி தனியாக சென்று திருவல்லிக்கேணியில் குற்றவாளி முகம்மது சஃபி என்பவரை கைது செய்து விசாரத்ததன்பேரில்
குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தின் பிரகாரம் (புல்லட் வாகன கொள்ளையில்) முக்கிய குற்றவாளி அப்துல்லாஹ் @ செல்வகுமார் யின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. திருடு போயுள்ள பல Royal Enfield Bullet வாகனங்கள் விற்பனைக்காக சென்னையிலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம், நெடுமாங்காடு, பளிச்சல் மற்றும் தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, தேனி, பகுதிகளில் விற்றது தெரிய வந்ததையடுத்து திருட்டு வாகனம் வாங்கும் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் மற்றும் இடை தரகர்களின் வாட்ஸ்அப் குழுவை தொடர்ந்து கண்காணித்து வந்ததில் இந்த கும்பலின் தலைவன் காயல்பட்டினம் மன்சூர், தூத்துக்குடி மாநாடு கிராமத்தை சேர்ந்த முத்து, கீழக்கரை நியாஸ், தேனி வத்தலகுண்டு ஜான் ஜெயராஜ் கொண்ட நெட்வொர்க் கொண்ட கும்பலோடு சென்னையில் உள்ள ஜமால் @ ஜமாலுதீன் , அப்துல்லாஹ் (ராம்நாடு), மாதவரம் சையது இப்ராஹிம் , பேரணாம்பட்டு அமீர் மற்றும் சிவகங்கையை சேர்ந்த கதிரவன் தஞ்சயை சேர்ந்த முல்லைவிசார மேலும் சிறையில் அடைக்கப்பட்ட சிபி ( திருவனந்தபுரம்) , அமீர் ஜான் கொண்ட கும்பலோடு தொடர்பில் உள்ளவர்கள் என தெரியவந்தது.. இதனையடுத்து எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயசித்ரா (குற்றபிரிவு) அவர்களது தலைமையில் கிழக்கு மண்டல தனிப்படையினர் இந்த கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியான ஜமாலுதீன் மற்றும் சையது இப்ராஹிம் (China Bazar Mobile shop) கைது செய்து விசாரணை செய்ததில் குற்றவாளி அப்துல்லாஹ் சென்னையில் திருடிய புல்லட் உடன் தஞ்சை செல்லும் வழியில் தங்கசங்கிலி பறித்த போது தஞ்சை டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருப்பது தெரியவந்தது . இதனையடுத்து அவனது கூட்டாளிகள் பேரனாம்பட்டு அமீர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கதிரவன் சென்னையில் வைத்து கைது
செய்யப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளிகள் சையது இப்ராஹிம் மற்றும் அப்துல்லாஹ் இருவரும் இதற்கென சென்னை கோட்டை இரயில் நிலையம் அருகில் china பஜாரில் யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் செல்போன் கடை வைத்து ” பிசினஸ் வாட்ஸ்அப் குழுவில் ” கொடுக்கும் ஆர்டர் இன் பேரில் நள்ளிரவில் வாகனங்களை அவனது கூட்டாளி அமீர் மற்றும் முல்லை இருவரையும் Zomotto வில் சேர்த்துவிட்டு Food delivery செய்வது போல் நள்ளிரவில் திருட வேண்டிய வாகனங்களை அடையாளம் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தொடர் புதிய Royal Enfield வாகனத்தை திருடியது தெரிய வந்தது.. அவர்களிடம் இருந்து இதுவரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட (10+16) என மொத்தம் ரூபாய் 51 லட்சம் மதிப்புடைய புதியரக 26 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த குற்றவாளிகளை பிடிக்க ஒத்துழைத்த சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் திரு.சுதாகர் அவர்களின் பங்கு முக்கியமானதாகும்.
திரு.சரவணகுமார் அவர்கள் திருச்சியை சேர்ந்தவர் இவர் போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர் இவருடைய தகப்பனார் Retired DSP கல்லூரியில் படிக்கும் போதே NCC – மில் ஆர்வம் உள்ளவராக இருந்தார் . இவரின் ஆர்வம் தான் சேர்ந்து மக்களுக்காக சேவை செய்யவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது.இவரைபோன்று ஒவ்வொரு இளைஞர்களும் மக்கள் சேவைக்காக வரவேண்டுமென்று அன்புடன் கூறுகிறார்.
இவர் நேர்மையாகவும்
நெஞ்சில் துணிவுடன் ஒவ்வொரு குற்றவாளிகளை தனியாக சென்று கைது செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இவர் வெற்றிக்கு காரணம் ரோல் மாடலாக கருதும் மதிப்பிற்குரிய J.C திரு.சுதாகர் IPS அவர்களும் தமிழ் நாடு தலைமை அவர்களின் ஊக்குவித்தலும்தான் காரணம் என்று கூறுகிறார்.
குற்றவாளிகளின் பெயர் பட்டியல் மக்களின் கவனதுக்காக தமிழ் நாடு காவல்துறை சார்பில் இந்த செய்தியின் மூலம் தெரியபடுத்துகிறது.
- மன்சூர் ( காயல்பட்டினம்)
- நியாஸ் (கீழக்கரை)
- அப்துல்லா( புதுவலசை- ராம்நாடு)
- ஜமாலுதீன் (கோயம்புத்தூர்)
- முகம்மது சஃபி( மல்லிபட்டிணம்)
- சையது இப்ராஹிம்( மாதாந்தம்)
- சிபி(கேரளா)
- முல்லை அரசன் (தஞ்சாவூர்)
- அமிர் ஜோன்( விருதுநகர்)
- அஜ்மல் கான்( கோட்டை பட்டினம்)