Police Department News

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகியவை முக்கிய நிகழ்ச்சிகளாகும்.

இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று மதுரை வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் போதிய பாது காப்பு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது சித்திரை திருவிழா பாதுகாப்பு தொடர்பாக அதிகாரி சங்கர் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு பகுதி களுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோவிலில் சுவாமி புறப்படும் இடம் ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் வைபவத்துக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்தாண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றுக்குள் 2 பக்தர்கள் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நடப்பாண்டு திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்காக மதுரை மாநகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published.