காரிமங்கலம் அருகே தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கரகப்பட்டியில் அமைந்துள்ள தலைகொண்ட அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி கணபதி பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை மற்றும் முதல் காலயாக பூஜை யாத்ராதானம்ஆகியவற்றுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை சுவாமி கண் திறப்பு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் 2ம் மற்றும்3ம் கால யாக பூஜை பிம்பசுத்தி ரக்ஷாபந்தனன், நாடிசந்தானம் ஆகியவை நடந்தது.
நேற்று காலை 9 மணிக்கு4 ம் காலயாகபூஜை, கணபதி பூஜை, கடங்கள் புறப்பாடு ஆகியவை நடந்தது அதனை தொடர்ந்து காலை 10:30 மணிக்கு மேல் விநாயகர்முருகன் தலைகொண்டஅம்மன் மூலஸ்தான கோபுரங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புளியங்குடி மகேஷ் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் டாக்டர் தம்பிதுரை முன்னாள் அமைச்சர்கள் கேபி. அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்எல்ஏக்கள் முனிவெங்கடப்பன், ராஜேந்திரன், முன்னாள் சேர்மன்ரவிச்சந்திரன், வேளாங்கண்ணி கல்வி குழும தாளாளர் கூத்தரசன் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது,
இன்று 5ம் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் மூ, தம்பிதுரை பானுமதி கோவில் அலங்காவலர் சுரேஷ் மற்றும் விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்