Police Department News

மானாமதுரையில் வைகையாற்றில் இறங்கிய வீர அழகர்

மானாமதுரையில் வைகையாற்றில் இறங்கிய வீர அழகர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோம நாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10நாட்கள் சித்திரை திருவிழா நடை பெறும்.

மதுரையில் நடைபெறு வது போல இங்கும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆனந்தவல்லி -சோமநாதர் கோவிலில் வைகையாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

வீர அழகர்கோவிலில் உள்ள மண்டகபடியில் கள்ளழகர் திருக்கோலத்துடன் சுந்தரராஜபெருமாள் பூப்பல்லக்கில் எழுந்தரு ளினார். நள்ளிர வில் எதிர்சேவை நிகழ்ச்சி நடை பெற்றது.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தியாக விநோத பெருமாள் கோவிலில் இருந்து வீர அழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு அணிந்து அப்பன் பெருமாள் கோவில் மற்றும் ரதவீதிகளில் வலம் வந்து ஆனந்தவல்லி, சோம நாதர் கோவில் முன்புள்ள வைகையாற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் “கோவிந்தா… கோபாலா…” கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

திருவிழாவை காண வைகையாற்றங்கரை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் திருக்கண் சாத்தி வீர அழகரை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீர அழகர் கோவிலில் வருகிற 10-ந்தேதி வரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.