Police Department News

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

மதுரை பழங்காநத்தம், நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 65). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவுக்கார பெண் குடும்பத்துடன் பழகி வந்தார். அவர் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு சென்று வருவார்.

இந்தநிலையில் சண்முக நாதன், உறவுப்பெண்ணின் 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுமியிடம் இது பற்றி வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி இது தொடர்பாக யாரிடமும் சொல்லவில்லை.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சண்முகநாதன் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் உறவுக்கார பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.