பாலக்கோடு நகருக்குள் வரும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் புறநகர் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தருமபுரி, சேலம், கோவை, பழனி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நகர நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி அந்த நேரத்தில் கல்குவரி லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை புறவழிச்சாலையில் செல்லாமல் நகருக்குள் வருவதால் 108 ஆம்புலன்ஸ் செல்லுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையம் முன்பு வணிக கடைகள் முன்பு பந்தல் அமைத்தும், சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு கனரக வாகனங்களை மாற்றுவழியில் இயக்க
வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை .