
மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய MLA
தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர்
கே .பி அன்பழகன் MLA அவர்கள் வழிகாட்டுதலோடு அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி மல்யுத்த பகுதியில் சிறுபாலம் அமைக்கவும், சித்தேரி ஊராட்சி மலைவாழ் மக்களுக்கு பட்டா, வீடு ,ஆடு ,மாடு மின் இணைப்பு வழங்கவும், பட்டுக்கோணம்பட்டி
காளிப்பேட்டை பொதுமக்களுக்கு பட்டா வழங்கவும் ,மத்தியம்பட்டி ஊராட்சியில் இருளர் இன மக்களுக்கு மயான கூடம், மயான பாதை அமைப்பது தொடர்பாகவும் .நமது அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. வே .சம்பத்குமார் MLA அவர்கள் பொதுமக்களின் கோரிக்கையை மனுக்கள் மூலம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி IAS அவர்களிடம் வழங்கினார். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.




