தமிழக காவல்துறையால் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தபட்டுள்ள காவலன் SOS செயலியை பெண்கள் அனைவரும் பயன்படுத்த திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கல்லூரிகளை தொடர்ந்து பெண்கள் அதிகம் வரக்கூடிய வணிக நிறுவனங்களில் காவலர்கள் உதவியுடன் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முகாமினை 05.12.2019-ம் தேதியன்று காவல் துணை ஆணையர் திரு. ச. சரவணன் அவர்கள் துவங்கி வைத்தார். காவல்துறையினரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்று கொண்டு முதல் நாளில் மட்டும் கல்லூரி மாணவிகள் உட்பட சுமார் 500 பெண்கள் KAVALAN SOS செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் பாலமுருகன் சென்னை