
சென்னையில் அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவ மனையுடன் இணைந்து சென்னை போலீசார் ரத்த தானம்
சென்னை பெருநகர காவல் துறை சார்பில் உயிர்காக்கும் தேவைகளுக்காக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு இரத்ததான முகாம் புனித தோமையர் மலை ஆயுதப்படை -2 வளாகத்தில் நடைபெற்றது.
இந்த சிறப்பு இரத்ததான முகாமில் சென்னை பெருநகர காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 110 ஆண் காவலர்களும், 16 பெண் காவலர்களும், 4 காவலர் குடும்பத்தினரும் என மொத்தம் 130 காவலர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.
பல்வேறு பணிகளோடு பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், பொது மக்களின் உயிர்காக்கும் உற்ற தோழனாக செயல்பட்டு வருவதில் சென்னை பெருநகர காவல் துறை பெருமிதம் கொள்கிறது.
