கடனை செலுத்தியும் நில பத்திரத்தை கொடுக்காததால் வங்கி கிளை மேலாளர் மீது கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள திருமல்வாடி பகுதியை சேர்ந்த விவசாயி மாரி (வயது.52), இவர் கடந்த 15 வருடத்திற்கு முன்பு மல்லுப்பட்டியில் உள்ள கனரா வங்கியில் தனக்கு சொந்தமான நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தார். கடந்த 3.12. 2021ல் முழு கடனையும் செலுத்தினார். பின்னர் நில பத்திரத்தை வங்கி கிளைமேலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம்(52), மாரி கேட்டுள்ளார்.
மேலாளர் 15 நாட்கள் கழித்து வரும்படி கூறியுள்ளர்,
அதன்படி மாரி 15 நாட்கள் கழித்து வங்கிக்கு சென்றபோது கேட்டபோது நீங்கள் வேறு ஒருவருக்காக கடன் வாங்க ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளீர்கள், அதனால் அந்த தொகை முழுவதையும் செலுத்திய பிறகு தான் நில பத்திரத்தை தரமுடியும் என மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மாரியிடம் கூறியுள்ளார். நான் வாங்கிய கடனை செலுத்திவிட்டேன் எனவே எனது நிலப்பத்திரத்தை உடனே தர வேண்டும் என கேட்டுள்ளார்,
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மேலாளர் மாரியை
தரக்குறைவாக பேசியுள்ளார்,
இதுகுறித்து மாரி பாலக்கோடு குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் பேரில், வங்கி கிளை மேலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மகேந்திரமங்கலம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது,
அதன்படி மல்லுப்பட்டி வங்கி கிளைமேலாளர் கிருஷ்ணமூர்த்தி மீது மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.