Police Recruitment

காரிமங்கலத்தில் , குளிர்பானம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை திடிரென ஆய்வு.

காரிமங்கலத்தில் , குளிர்பானம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை திடிரென ஆய்வு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு வரப்பெற்ற புகார் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்.,அவர்கள் மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலத்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் காரிமங்கலத்தில் திடீர் ஆய்வு செய்தனர். காரிமங்கலம், மொரப்பூர் மெயின் ரோடு, அகரம் பிரிவு ரோடு , தர்மபுரி மெயின் ரோடு மற்றும் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், குளிர்பான கடைகள் மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் , மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் குளிர் பானங்கள், குடிநீர் பாட்டில்கள் , கேன்களில் உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி, தயாரிப்பு முகவரி மற்றும் உணவு பாதுகாப்பு லோகோ உடன் கூடிய உரிமம் எண் உள்ளதா என்பதை கண்காணித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் ஒரு மொத்த விற்பனை கடையில் உரிய விபரங்கள் அச்சிடப்படாத குளிர்பான சிறு டியூப் பாக்கெட்டுகள் மற்றும் மாட்லாம்பட்டி பைபாஸ் பிரிவில் உள்ள பேக்கரியில் குடிநீர் பாட்டில்களில் உரிய தயாரிப்பு தேதி , முடிவு தேதி இல்லாமல் இருந்த 20 லிட்டர் கேன்கள், ஒரு லிட்டர் மற்றும் 500 மிலி கொள்ளளவு உள்ள பாட்டல்களை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி இருகடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அளித்ததுடன் தலா ரூபாய்.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் உணவகங்களில் பழைய இறைச்சியோ, செயற்கை ரசாயன பவுடர் உள்ளனவா, உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பலமுறை பொறிப்பதற்கோ, சமைப்பதற்கோ பயன்படுத்தப்படுகிறதாஎன கண்காணித்தனர். ஒரு உணவகத்தில் ரசாயனப் பவுடர் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. உணவகங்களில் உணவை பரிமாறுவதற்கும், பார்சல் இடுவதற்கும் வாழை இலையை பயன்படுத்த அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வினுடே அகரம் பிரிவு ரோடில் உள்ள மாம்பழ மொத்த விற்பனை கடைகள், பொன்னேரி பகுதியில் உள்ள தற்காலிக சாலை ஓர பழக்கடைகளையும் ஆய்வு செய்து பழங்களில் செயற்கை ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்டுள்ளதா அல்லது ரசாயன கற்கள் உள்ளனவா என சோதனை இட்டுப் பார்த்தனர்.
ரசாயனம் கற்கள் எதுவும் கண்டறியப்படவில்லை, தரமற்ற, அழுகும் நிலையிலிருந்த மாம்பழங்கள் இரண்டு கடைகளிலிருந்து சுமார் 60 கிலோ அளவிலானது அப்புறப்படுத்தி முறையாக அழிக்க கேட்டுக் கொண்டனர். தற்காலிக மற்றும் மொத்த விற்பனை நிலைய கடைகள் அனைவரும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்று வணிகம் செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.