Police Recruitment

ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் குறித்து புகார் கொடுக்கலாம்

ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் குறித்து புகார் கொடுக்கலாம்

தமிழக அரசு பொது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வினியோகித்து வருகிறது அவ்வாறு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை சிலர் கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் இந்த நிலையில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் பற்றி ரகசிய தகவல் தெரிவிக்க கட்டிணமில்லா தொலைபேசி எண்.1800 599 5950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

அது தொடர்பாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை மதுரை மண்டல போலீஸ் சூப்ரண்டு சிநேகப்பிரியா துணை போலீஸ் சூப்ரண்டு பாலசுப்ரமணியன் ஆகியோரின் உத்தரவின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மாட்டுத்தாவணி பெரியார் ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள் ரயில் நிலையம் கோரிப்பாளையம் ஆகிய பகுதியில் கட்டணமில்லா தொலை பேசி எண் தொடர்பான அறிவிப்பு நோட்டீஸ்கள் பலகைகள் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.