பாலக்கோட்டில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச சட்டப் பயிற்சி
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச சட்டப் பயிற்சி முகாம் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. முன்னிலை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், நீதிமன்ற தட்டச்சு எழுத்தர் ஓய்வு காவேரி, ஒருங்கிணைப்பாளர் சங்கரன், மாநிலத் துணை இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையத்திலும் மற்றும் பொது நிறுவனங்களில் லஞ்சம் ஊழலற்ற முறையில் பொதுமக்கள் தனிநபர்களாக எதிர்கொள்ளும் வகையில் சட்டங்களை தெரிந்து கொள்ளுதல், கிராம ஊராட்சியில் அடிப்படை வசதியான குடிநீர், தார் சாலை, தெரு விளக்கு, சாக்கடை கால்வாய் போன்ற அடிப்பதை வசதிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளுதல், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான சட்டப் பயிற்சியும், தகுதி வாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஒத்த ரூபாய் கூட ஊழல் இல்லாமல் பெறுவதற்கான சட்டத்தையும் சட்டப்பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் முத்து, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வாசுகிநாதன், மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கணேஷ், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், தேவன்,ஒன்றிய செயலாளர் தர்மசாஸ்தா, ஒன்றிய செயலாளர் கலையரசன் மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.