Police Recruitment

பொன்விழா ஆண்டை முன்னிட்டு மகளிர் போலீசாரின் பாய்மரப்படகு பயணம்

பொன்விழா ஆண்டை முன்னிட்டு மகளிர் போலீசாரின் பாய்மரப்படகு பயணம்

மகளிர் போலீஸ் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து கோடியக்கரை வரை மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு போலீஸ் துறையில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட போலீசார் பாய்மர படகில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தக் குழுவினர் சென்னையில் இருந்து கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.

இப்பயணக்குழு இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாய்மர படகு பயணத்தை கடலூர் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ரோட்டரி சங்க பிறையோன், கருணாகரன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.