Police Recruitment

கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை- கலெக்டர் சாந்தி எச்சரிக்கை

கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை- கலெக்டர் சாந்தி எச்சரிக்கை

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-

தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை, மதுவிலக்கு அமல்பிரிவு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மற்றும் வனத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் தொடர்பான புகாரினை 63690-28922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

கள்ளச்சாராயம் காய்ச்சு பவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், வருவாய் கோட்டாட்சியர்கள் கீதாராணி (தருமபுரி), வில்சன் ராஜசேகர் (அரூர்), மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி, உதவி ஆணையர் கலால் (பொ) சாந்தி, அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், மருத்து வத்துறை, வனத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.