Police Recruitment

வாகன ஓட்டிகள் இந்நாட்டு மன்னர்களா?உச்சநீதிமன்ற குழு.

வாகன ஓட்டிகள் இந்நாட்டு மன்னர்களா?
உச்சநீதிமன்ற குழு.

நாம் காலையில் ஒரு சாலையில் அவசர வேலையாக வேகமாக பரபரப்பாக போய் கொண்டிருப்போம் என்ன காரணம் என்று தெரியாமலே எறும்பு வரிசையை போல் வண்டிகள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் நல்ல வெயில் வேறு அடித்து கொண்டிருக்கும் கடைசியில் என்னவென்று பார்த்தால் ஒரு தண்ணீர் லாரி மெதுவாக ஆடி அசைந்து போய் கொண்டிருக்கும் அதன் ஓட்டுநர் அந்த பகுதிக்கே தான்தான் ராஜா என்பதை போல அவ்வளவு அலட்சியமாக மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் லாரியை ஓட்டி சென்று கொண்டிருப்பார் இது போன்ற சமயங்களில் நாம் ஹாரன் அடித்தால் விலகி செல்ல வேண்டிம் அதைத்தான் நம் மாண்புமிகு உச்சநீதிமன்ற அரசர்களும் தீபக் மிஸ்ரா மற்றும் C.நாகப்பன் கடுமையாக கண்டித்துள்ளனர்.

உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகம் நிகழும் நாடுகளில் நம் இந்தியா முன்னணியில் உள்ளது. வாகன ஓட்டிகள் தங்களை ஒரு மகாராஜாவை போல கருதி வாகனங்களை அலட்சியமாக ஓட்டுகின்றனர் நடந்து செல்பவர்கள் மற்ற வாகனாங்களை ஓட்டி செல்பவர்கள் பயந்து பயந்துதான் சாலையில் செல்லுகிறார்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் IPC 304 A பிரிவு அளிக்கும் தண்டனை நிச்சயமாக அலட்சியமாகவும் குடித்து விட்டும் வாகனாங்களை ஓட்டுபவர்களுக்கு போதுமானதாக இல்லை எனவே இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் அரசிடம் கலந்து பேசி ஆராய்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து கடுமையான தண்டனையை அளிக்க வேண்டும்.

Ref.Supreme Court of India Haryana 2016. Decided on 26.08.2016 and Saurabh Bakshi vs State of punjab 2015

Leave a Reply

Your email address will not be published.