தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75வது சுதந்திர தினவிழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து வெள்ளை புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். பின்னர் காவல் துறையினர் அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது சுகாதார துறையை சார்ந்த அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 150 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 49 பேருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் விழாவில் அனுமதிக்கப்படவில்லை.
சுதந்திர தினவிழா நடைபெற்ற மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிள் டவுன் டி.எஸ்.பி. கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்த ராஐன் மற்றும் போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்