இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 304 A கொலைக்கு கொடுக்கப்படும் உரிமமா ?
நம்முடைய இந்திய தண்டனைச் சட்டம் 1860 ல் துவக்கப்பட்டபோது இந்த 304 A என்ற பிரிவு இல்லை. இந்திய தண்டனை சட்ட வரைவில் சேர்க்கப்பட்டிருந்த இந்த பகுதி 1860 ல் அந்த வரைவு சட்டவடிவம் பெற்ற போது நீக்கப்பட்டு விட்டது பின்னர் 1870ல் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டத்தில் அது சேர்க்கப்பட்டது.
இப்புதிய பிரிவு எந்த ஒரூ புது குற்றத்தையும் உருவாக்கவில்லை மாறாக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 299 & 300 வரையறைக்கு வெளியே நிகழும் குற்றங்களையே அதாவது தன்னுடைய செயலால் ஒருவருக்கு மரணம் விளைவிக்கும் நோக்கம் இல்லாமலும் அச்செயல் அவரது மரணத்திற்குக் காரணமாகலாம் என்று தெரியாமலும் ஒருவருடைய மரணணத்திற்கு காரணமான செயலை செய்த குற்றத்தை குறிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் அஜாக்கிறதை மற்றும் மூர்க்கத்தனமான செயலினால் (இந்த பிரிவிற்கு அத்தியாவசியமான அம்சம்) பாதிக்கப்பட்டவருக்கு மரணம் சம்பவித்தால் மட்டுமே இந்த பிரிவு பொருந்தும். ஆனால் சட்ட வல்லுனர்கள் சிலர் இந்த பிரிவு நோக்கம் இல்லாமல் செய்த கொலைக்கு தண்டனையா? அல்லது அஜாக்கிறதை மற்றும் கண்மூடித்தனமான என்ற பெயரில் கொலைக்கு கொடுக்கப்படும் உரிமமா? என்ற வினாவை எழுப்பி வருகின்றனர்.