Police Recruitment

விருதுநகர் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல்

விருதுநகர் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 32). இவருக்கும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 15 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சரவணன், மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து பாலசரஸ்வதி தனது தாய்வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் சரவணன் சமரசம் பேசி மனைவியை அழைத்து சென்றார். இதற்கிடையில் மீண்டும், சரவணன் மனைவி யிடம் கூடுதலாக வரதட்சணை கேட்க பாலசரஸ்வதி தனது பெற்றோர் வீட்டில் இருந்து 14 பவுன் நகையை வாங்கி கொடுத்துள்ளார்.

ஆனால் சரவணன் மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு, மாமனார் குமார் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் பாலசரஸ்வதிக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விருதுநகர் மாவட்ட கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அருப்புக்கோட்டை அனை த்து மகளிர் போலீசார் சரவணன், அவரது பெற்றோர் குமார்- ராேஜஸ்வரி, உறவினர் பொன்மாரி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.