மகேந்திரமங்கலத்தில் பேத்தியின் சாவிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி புகார்
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே திம்மராயனஅள்ளி கிராமத்தை சேர்ந்த திவ்யா (வயது. 24)
திவ்யாவின் தந்தை அர்ஜூனன் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால் பாட்டி குப்பம்மாளின் அரவனைப்பில் இருந்து வந்தார்.
கடந்த 4 வருடத்திற்க்கு முன்பு திவ்யாவை மகேந்திரமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகுணசேகரன் என்பவருக்கு 2 ம் தாராமாக திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு
ஏற்பட்டு வந்தது,
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் விரக்தியடைந்த திவ்யா வீட்டிலிருந்த சுகர் மற்றும் பி.பி மாத்திரைகள் அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மயக்க நிலையில் இருந்த திவ்யாவை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவீர சிகிச்சையில் இருந்தவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்த திவ்யாவின் பாட்டி குப்பம்மாள் பேத்தி திவ்யாவின் இறப்பிற்க்கு கணவன் ராஜகுணசேகரன், மாமியார், மாமனார் ஆகியோர்தான் காரணம் என்றும் சாவில் சந்தேகம் இருப்பதாக மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.