Police Recruitment

காவல்துறை ஓட்டுநர் உரிமம் கைப்பற்ற அதிகாரம் என்ன?

காவல்துறை ஓட்டுநர் உரிமம் கைப்பற்ற அதிகாரம் என்ன?

கடந்த 10/12/2022 அன்று, மனுதாரரரான தமிழ்நாடு அரசின் பேருந்து ஓட்டுநர், தனது வாகனத்தை ஓட்டி வரும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி, அதை ஓட்டி வந்த நபர் இறந்துவிட்டார்.

இதனால் அவருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம், சட்டப்பிரிவு 279 மற்றும் 304,ஏ, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவருடைய ஓட்டுனர் உரிமம் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.

போலீசார், அதனை கடந்த 12/12/2022 அன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பிவிட்டனர். இவ்வாறு பற்றுகை செய்துள்ள ஓட்டுனர் உரிமத்தை திரும்ப கொடுக்ககோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப் பேராணை மனுவான, செந்தில்குமார் எதிர் ஆய்வாளர், அவர்கள் குண்டம் காவல் நிலையம், மற்றும் ஒருவர் என்ற வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறையினருக்கு, மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 206 இன் கீழ், ஓட்டுனர் உரிமம் பற்றுகை செய்ய வழங்கப்பட்டுள்ள உரிமையானது, மேற்படி சட்ட பிரிவின் உட்பிரிவு ஒன்று, இரண்டு, மற்றும் நான்கில், கூறியுள்ளதை பார்க்கும் பொழுது, அதில் பற்றுகை செய்யப்பட வேண்டிய நபர் ஆனவர், ஏதேனும் போலியான ஆவணங்கள் வாகனம் குறித்து கொடுத்திருப்பாராயின், பற்றுகை செய்யப்படலாம் என்றும், குற்ற வழக்கில் ஈடுபட்டு அவர் தலைமறைவாகி விடுவார், அல்லது அழைப்பாணையை அவருக்கு சார்பு செய்ய முடியாது, என்று கருதும் நபர்களிடம் பற்றுகை செய்யலாம் என்றும், மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ், அவர் ஏதேனும் குற்றம் செய்திருப்பாராயின் பற்றுகை செய்யலாம் என்றும், மேற்படி 206 சட்டப்பிரிவினை முழுமையாக பார்த்தால், அதன் அடிப்படையில் இந்த வழக்கிலும், காவல்துறையினர் ஓட்டுநர் உரிமத்தை பற்றுகை செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை என்றும், மேலும் அவர்கள் இரண்டாம் எதிர்மனுதாரரான, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள நிலையில், அவர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டம், சட்டப் பிரிவு 19 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவர்களால் ஓட்டுனர் உரிமம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதனை ரத்து செய்யும் முன், அந்த உரிமத்தை வைத்துள்ளவருக்கு அறிவிப்பு கொடுத்து, அவரிடம் உரிய விளக்கம் பெற்று, அதன் அடிப்படையில் தான் ரத்து செய்ய இயலும் என்றும், நீதிப்பேராணை மனுவின் மனுதாரரிடம் உரிய விளக்கம் கேட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அதை விடுத்து உரிய விளக்கம் வழங்க அவருக்கு போதிய அவகாசம் உள்ளதாலும், அதை விடுத்து ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றியுள்ளது சட்டத்திற்கு விரோதமானது என்று குறிப்பிட்டு, இரண்டாம் எதிர்மனுதாரரை ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.