Police Recruitment

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் திருவுருவசிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா டாக்டர் . மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்து பேச்சு .

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் திருவுருவசிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா டாக்டர் . மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்து பேச்சு .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் திருவுருவ சிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா நிகழ்ச்சி மார்டின் பவுண்டேசன் இயக்குநர் டாக்டர் . லீமாரோஸ்மார்டின் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்பேஷ் ஜோன் இண்டியா நிர்வாக இயக்குநர் டாக்டர் .ஆனந்த்மேகலிங்கம், டாக்டர் .அப்துல் கலாம் பவுண்டேசன் துணை நிறுவனர் ஷேக் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் . மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கலந்து கொண்டு அப்துல் கலாம் திருவுருவ சிலை மற்றும் ராக்கெட் மாதிரியை திறந்து வைத்து பேசியதாவது,

அறிவியலில் உலகமே நிலவில் தண்ணீர் இல்லை என தோல்வி அடைந்த போது,
இந்தியா மட்டும் தான் சந்திராயன் விண்கலம் மூலம் தண்ணீர் உள்ளது என நிருபித்தது
இதன் மூலம் உலக நாடுகளுக்கு விண்வெளி அறிவியலில் இந்தியா முன்னோடியாக இருப்பது உறுதியாகியது.
அப்துல் கலாம் கனவை மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் நனவாக்கி வருவது இப்பள்ளியில் நடக்கும் நிழ்ச்சிகளின் மூலம் உறுதியாகி உள்ளது, தொடர்ந்து விண்வெளி மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீதியல் துறை அலுவலக மேலாளர் சுகுமார், மாவட்ட கல்வி அலுவலர் இளங்கோ, டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
ஆசிரியை செல்வி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.