பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி சப்.இன்ஸ்பெக்டர் தணிகாசலம் அவர்களில் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் இன்று போதை இல்லா தமிழகம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை பாலக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பள்ளியிலிரருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, பஸ் நிலையம், கடைத்தெரு, ஸ்தூபி மைதானம், காவல் நிலையம் வரை ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
பேரணியில் மாணவிகள் வேண்டாம் போதை, போதை பாதையை மாற்றும்,
போதை இல்லா தமிழகம் வளமான தமிழகம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
இந்த பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.