பாலக்கோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி DSP தலைமையில் போலீசார் அமைதி ஊர்வலம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வருகிற 18 ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று மாலை போலீசாரின் அமைதி ஊர்வலம் டி.எஸ்.பி. சிந்து தலைமையில் நடைப்பெற்றது.
இந்த ஊர்வலத்தில் பாலக்கோடு துணை காவல் கோட்டத்திற்க்குட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் மற்றும் மகளிர் காவல் நிலையம் ஆகிய 6 காவல் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சுப்ரமணியம், வெங்கட்ராமன், வீரம்மாள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொன்டனர்.
ஊர்வலமானது பாலக்கோடு பஸ் நிலையம் தொடங்கி கடைதெரு, தக்காளிமண்டி, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்று காந்தி சிலையை அடைந்தது.
இந்த ஊர்வலமானது விநாயகர் சதுர்தியில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் திருவிழா நடைபெற போலீசார் உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.