சிட்டி போலீஸ் விரிவாக்கம்
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
திருப்பூர் 15 வேலம்பாளையம் அமர்ஜோதி குடியிருப்பு பகுதியில் 38 ‘சிசிடிவி’ கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.
போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் ‘சிசிடிவி ‘ கேமராக்களை இயக்கி வைத்தார். அதன் பின், அவர் பேசியதாவது,
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பல்வேறு திருட்டு, கொள்ளை சம்பவங்கள் மற்றும் எளிதில் குற்றங்கள் தடுக்க கண்டுபிடிக்க முடிகிறது.
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. அப்போது அவினாசி பல்லடம் மங்கலம் பகுதிகளில் உள்ள போலீஸ் ஷ்டேஷன்கள் திருப்பூர் மாநகருடன் இணைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி துணை கமிஷனர் வாசுகுமார், அமர்ஜோதி கார்டன் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போலிஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.