Police Department News

போக்குவரத்து சிக்னல்களை அகலப்படுத்த திட்டம்

போக்குவரத்து சிக்னல்களை அகலப்படுத்த திட்டம்

மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாநகரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீ சாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையில் போக்குவரத்து நெரி சல் மிக்க ஒன்றாக சிவகங்கை ரோடு உள்ளது. அண்ணா பஸ் நிலைய சந்திப்பில் இருந்து மேல மடை சந்திப்பு வரை உள்ள பகுதிகளில் உள்ள சாலையில் சாதாரண நேரங்களில் கூட போக்குவரத்து நெரி சல் அதிகமாக காணப்படுகிறது.

அண்ணா நகர், தெப்பக் குளம், கே.கே.நகர், மாட்டுத் தாவணி போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பு சாலைகள் சிக்னல்களில் சந்திக் கின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்கா மால்கள், கல்லூரிகள் உள்ளன.
மதுரை நகரில் இருந்து திருச்சி, சென்னை, தூத்துக் குடி நான்கு வழிச்சாலை, ரிங்ரோடு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை பயன் படுத்தி வருகின்றனர். அண்ணா பஸ் நிலையம், ஆவின் பாலகம், மேலமடை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
தினசரி பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதனால் வாக னங்கள் சிக்னல்களில் அதிக நேரம் நீண்ட வரிசை யில் வேண்டி உள்ளது. இந்த நிலையில் இந்த சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் சிரம மின்றி செல்லவும், இந்த மூன்று சிக்னல் பகுதிகளை அகலப் படுத்தி மேம்படுத்தி நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக நிலம் கையகப் படுத்தும் படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது. அத்துடன் மேலமடை சந்திப்பில் அதிக நெரிசல் இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணா பஸ் நிலையம், ஆவின், மேலமடை ஆகிய 3 சிக்னல்களிலும் 45 முதல் 50 அடி வரை சாலையை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மதுரை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிவகங்கை ரோட்டில் உள்ள 3 முக்கிய சிக்னல்களை அகலப்படுத்தி மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கும்.
இதற்காக சுமார் ரூ.160 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலையை மேம்படுத்தும் பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. மேலமடை சந்திப்பில் பாண்டிகோவில் ரோடு, ஆவின் ரோட்டை இணைக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.