Police Department News

காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

திருநள்ளாறு
புதுவை மாநிலத்தில் சமீப காலமாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும், பள்ளி, கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக காரைக்காலில் மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன், இன்ஸ்பெக்டர்கள் லெனின்பாரதி (திரு-பட்டினம்), புருஷோத்தமன் (காரைக்கால் நகரம்) மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆன்லைன் மோசடிகள், மொபைல் போன் மூலமாக தவறான தகவல்கள் பரப்புவது மற்றும் புகைப்படத்தில் உள்ள பெண்களின் முகத்தை தவறாக சித்தரித்து பணம் பறிக்க முயல்வது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரி, கடைகள், முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.