
குற்றங்களை தடுப்பதற்கான சில வழிமுறைகள்
குற்றம் புரிந்தவர் கடினமான உழைப்பாளியா? அல்லது சோம்பேறியா? என்பதை அவர்கள் செய்யும் தொழிலை வைத்து தெளிவாக அறிந்து கொண்டு சோம்பேறியாக இருப்பவர்களுக்கு கடுங்காவல் தண்டனை கொடுத்து கடின உழைப்பாளியாகவும் கடினமான உழைப்பாளியாக இருந்தால் வெறுங்காவல் தண்டனை கொடுத்து சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க செய்யலாம்
இப்படி கொடுக்கிற தண்டனைதான் குற்றவாளிக்கு சரியாக திருந்துவதற்கான தண்டனையாக இருக்க முடியும். இதை செய்வதற்கு இ.த.ச.பிரிவு 66 மூலம் நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்ள்ளது.
இந்த நோக்கத்திற்காகதான் தண்டனையை வெறும் காவல் என்றும் கடுங்காவல் என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள்
இரண்டிலும் பழக்கப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது.
இது போன்ற நபர்களை பொருளாதார வழியில் நலிவடைய செய்து பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஓய்வு ஒழிவு இன்றி கடுமையாக உழைக்க வைக்க வேண்டும் இதற்கு குற்றம் புரிந்தவரின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்
சொத்துக்களை பறிமுதல் செய்தல் என்று ஒருவகை தண்டனை குற்றவியலில் இ.த.ச. பிரிவு 53 ல் உள்ளது.
இந்த தண்டனையை செயலாக்கம் செய்வதன் மூலம் குற்றங்களை தடுக்கவும் குறைக்கவும் முடியும்.
