Police Department News

பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை
They

பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை
They

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் சஞ்சீவி மலையின் பின்புறம் காட்டுப்பகுதி உள்ளது.

மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை ஆகியவை நட்டு விவசாயம் பார்த்து வரு கின்றனர்.

இந்த நிலையில் விவசாய பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றவர்கள் நடந்து செல் லும் பகுதியில் அடையா ளம் தெரியாத நிலையில் ஆண் உடல் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

பின்னர் உடனடியாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் எரிந்த நிலையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்ட னர்.

மேலும் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒருவர் மட்டும் அமர்ந்து மது அருந்தி யது போன்றும், சில் லறை காசுகள் சிதறிக் கிடப்பதையும் பார்த்த போலீசார் மது அருந்திவிட்டு பிணமாக கிடந்த நபர் உட லில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசார ணையை தொடங்கினர்.

மேலும் அக்கம்பக்கத்தில் யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா அல்லது குடும்ப பிரச்சினை காரண மாக வெளியேறினார்களா என்றும் விசாரணை நடத் தப்பட்டது.

அதில் சஞ்சீவி மலை அடிவாரப் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. காலனி சிரஞ்சீவி நகரில் வசித்து வரும் சரவணகுமார் (வயது 48) என்பவர் அதிக மன அழுத்தத்துடன் காலை வீட்டிலிருந்து வெளியேறி யது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்க ளுக்கு தகவல் தெரிவித்து அடையாளம் கூற அழைத்து வந்த நிலையில் இறந்தவர் குறித்த முழு விவரமும் தெரிய வந்தது.

தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் சரவணகுமார் என்றும், அவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், சீதாலட்சுமி எனும் கல்லூரியில் படிக்கும் மகளும், விஜய் என்ற மக னும் உள்ளது தெரிய வந் தது.

சரவணகுமார் ராஜபா ளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மம்சாபு ரம் விலக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மேற்பார்வையாள ராக பணியாற்றி வரவு, செலவு கணக்குகளை பார்த்து வந்துள்ளார்.

இதற் கிடையே கடந்த தீபாவளி தினத்தன்று பெட்ரோல் பங்கில் வரவு செலவு கணக் குகளை சரிபார்க்கும் பொழுது கணக்கில் குளறு படி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை சரவணகுமார் பெட்ரோல் பங்கிற்கு கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிக மன அழுத்தத்தில் இருந்த சரவணகுமார் தீபாவளி முடிந்த நாளிலிருந்து பணிக்கு செல்லாமல் பெட் ரோல் பங்கிற்கு கட்ட வேண் டிய தொகையை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

வேலைக்கு செல்லாதது குறித்து குடும்ப உறுப்பினர் கள் கேள்வி எழுப்பிய போது ரூ.30 ஆயிரம் பணம் தர வேண்டும் என்பதை மட்டும் கூறியுள்ளார்.

பின்னர் அவர்கள் உதவியு டன் ரூ.30 ஆயிரம் பணத்தை பெட்ரோல் பங்க் நிறுவ னத்திலும் கட்டியுள்ளார்.

மீதம் கட்ட வேண்டிய ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை எப்படி தயார் செய்வது என நண்பர்களிடம் கூறி புலம்பி யுள்ளார்.

இந்தநிலையில் அதிக மன அழுத்தத்தில் இருந்த சரவணகுமார் நேற்று காலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவி மலை பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

பணப்பிரச்சினையில் தற் கொலை செய்த கணவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.

Leave a Reply

Your email address will not be published.