பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு 17 செயலிகள் நீக்கம் கூகுள் நிறுவனம் அதிரடி
போனில் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக 17 கடன் வழங்கும் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான செயலிகள் இடம் பெற்றுள்ளன. அதில் விதிகளை மீறும் செயலிகள் மற்றும் சட்ட விரோதமான செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்குவது வாடிக்கை அந்த வகையில் தற்போது 17 செயலிகளை கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த செயலிகள் அனைத்தும் பயனர்களுக்கு கடன் வழங்குவதாகும் மொத்தம்18 கடன் செயலிகள் குறித்து கூகுள் நிறுவனத்திற்கு புகார் வந்துள்ளது
அதில் 17 செயலிகள் பயனர்களுக்கு கடன் வழங்குவதுடன் போனில் உள்ள தகவல்கள் போட்டோக்கள் வீடியோக்களை உளவு பார்த்தது தெரியவந்தது
உளவு பார்த்து சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை வைத்து கொண்டு பயனர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது
குறிப்பாக இந்த செயலிகள் ஆப்ரிக்கா லத்தீன் அமெரிக்கா வட கிழக்கு ஆசியா ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களை குறி வைத்து மிரட்டுகிறது
இதனையடுத்து 17 செயலிகளையும் ப்ளேஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது மேலும் நுகர்வோர் இந்த 17 செயலிகளை போனிலிருந்து நீக்குமாறும் அறிவுறித்தியுள்ளது.
நீக்கப்பட்ட செயலிகள் பின் வருமாறு.
1.AA kredit
2.Amor Cash
3.GuayabaCash
4.EasyCredit
5.Cashwow
6.Credibus
7.FlashLoan
8.PrestamosCredito
9.Prestamos De CreditoyumiCash
10.Go Credito
11.Instantaneo Prestamo
12.Cartera Grande
13.Rapido Credito
14.Finupp Lending
15.4S Cash
16.TrueNaira
17.Easy Cash.