போதை பொருட்கள் விற்பனை ஒழிக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற SP உறுதி
கள்ளக்குறிச்சியில் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் புதிய எஸ்.பி., யாக பொறுப்பேற்ற சமய்சிங் மீனா நிருபர்களிடம் கூறுகையில்
மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்.குற்றத்தடுப்பு பணிகள் போலீசாரை ஒருங்கிணைத்து தீவிரப்படுத்துவேன்.
கஞ்சா கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை ஒழிப்பேன் கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கையெடுப்பேன். என்றார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள SP சமய்சிங்மீனா ஜெய்ப்பூரில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார் 2017 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்., தேர்வுவில் வெற்றி பெற்று ஐதராபாத்தில் டிரைனிங் முடித்துள்ளார்.
பின் தர்மபுரி திருநெல்வேலி உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் பணிபுரிந்த நிலையில் சென்னை மத்திய கிழக்கு பகுதியில் போக்குவரத்து காவல் உதவி ஆணையராகவும் இருந்துள்ளார்.