Police Department News

நடிகை கௌதமிக்கு சொந்தமான இடத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்தும் மற்றும் கௌதமியின் பணத்தை கையாடல் செய்து ஏமாற்றியவர்கள் கைது.

நடிகை கௌதமிக்கு சொந்தமான இடத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்தும் மற்றும் கௌதமியின் பணத்தை கையாடல் செய்து ஏமாற்றியவர்கள் கைது.

சென்னை இ.சி.ஆர் ரோட்டில் வசித்து வரும் பிரபல நடிகை கௌதமி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தனக்கு அறிமுகமான வேளச்சேரியை சேர்ந்த C.அழகப்பன் , நடிகை கௌதமிக்கு சொந்தமான தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலத்தினை விற்று தருவதாகவும், விற்று வரும் பணத்தைக் கொண்டு வேறு நல்ல அசையா சொத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறியது நம்பி நடிகை கௌதமி அவர்கள் தனக்கு சொந்தமான கோட்டையூர் இடத்தை விற்பதற்காக C.அழகப்பன் அவர்களுக்கு கொடுத்த பொது அதிகாரத்தை மோசடியாக பயன்படுத்தி கடந்த 2020 ஆம் ஆண்டில் சென்னை நீலாங்கரை சன் ரைஸ் அவன்யூவில் உள்ள 15895 சதுர அடி கொண்ட இடத்தினை கௌதமி பெயில் பதிவு செய்தால் கூறி மோசடியாக C. அழகப்பன் அவரது மனைவி நாச்சாள் பெயரிலும் பத்திரம் பதிவு செய்து ரூபாய் 3.90 கோடி வரை ஏமாற்றியுள்ளார். மேலும் அதே போன்று நடிகை கௌதமிக்கு சொந்தமாக ஸ்ரீபெரும்புதூர் ,திருவள்ளூர், தூத்துக்குடி ,திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள இடத்திலேயும் மோசடி செய்து ஏமாற்றியதாகவும் தெரிய வருகிறது. மேலும் நடிகை கௌதமியின் பல்வேறு வங்கி கணக்கில் இருந்து வியாபாரம் 2014 முதல் டிசம்பர் 2022 வரை பல்வேறு தேதிகளில் நடிகை கௌதமியிடம் ஏற்கனவே கையெழுத்து பெற்று வைத்திருந்து காசோலை வரைவு காசோலை செலான் ஆகியவற்றை C. அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியாக பயன்படுத்தி பல்வேறு வங்கி கணக்கில் பணத்தினை மாற்றிய நம்பிக்கை மோசடி செய்து சுமார் ரூ .6.90 கோடி வரை கையாடல் செய்தும்ரூ 9. 90 கோடி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு EDF-1 வழக்கு பதிவு செய்த புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .சந்திப் ராய் ரத்தோர் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் திருமதி Dr.P.K செந்தில்குமாரி I.P.S அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையாளர் திருமதி.N.S நிஷா I.P.S அவர்களின் மேற்பார்வையிலும் மத்திய குற்றப்பிரிவு,EDF-1 காவல் உதவி ஆணையாளர் திரு.S.ஜான் விக்டர் அவர்களின் தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் திருமதி.A.மேனகா, திரு.பூமாறன் , திரு.புஷாபராஜ் மற்றும் காவல் குழுவினர் ஆகியோர் தனிப்படை அமைத்து மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அழகப்பன் ஆ/வ 63,த/பெ சொக்கலிங்கம், அழகப்பன் மனைவி நாச்சாள் பெ/வ 57, அவரது மகன் அழகப்பன் ஆ/வ 32 (எ)சிவா அழகப்பன், மருமகள் ஆர்த்தி பெ/வ 28 மற்றும் சதீஷ் குமார் ஆ/வ 27 ஆகியோர்களை கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் உள்ள குன்னங்குளம் என்ற இடத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தவர்களை 21.12.2023 தேதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,5 அசல் ஆவணங்கள் 2, லேப்டாப்-1,3.மொபைல்போன்-5,4.sim Card -4 ,5.,Tab-1,.6.26 பவுன் தங்க நகைகள் மற்றும் 7.ரூ 3.5 லட்சம் ஆகியவர்களை விசாரணையின் போது கைப்பற்றப்பட்டன. மேலும் கைது செய்து அவர்களை கேரள மாநிலத்தில் உள்ள கணம் உண்ணக்குளம் வெற்றிவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்பு சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ராஜபடுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.