Police Department News

டில்லியில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

டில்லியில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

டில்லியில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பழமையான வாகனங்களை விடுவிப்பதற்கான கொள்கையை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.என டில்லி அரசு தெரிவித்துள்ளது.

டில்லி போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது.

டில்லியில் பறிமுதல் செய்யப்பட்ட பழமையான வாகனங்களை விடுவிக்க இருசக்கர வாகனங்களுக்கு 5000 மற்றும் கார்களுக்கு 10000/- அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது காலாவதியான இந்த வாகனங்களை சாலைகளில் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றை வேறு மாநிலத்திற்கு மாற்றி கொள்வதற்கு தடையில்லா சான்றிதழை பெற ஆறு முதல் 12, மாதங்கள் வரை அவகாசம் வழங்கவும் ஆலோசனை நடத்தப்படுகிறது

அதே போல் காலாவதியான இந்த வாகனங்களை பொது இடங்களில் நிறுத்தவோ அல்லது சாலையில் ஓட்டவோ மாட்டோம் என வாகன உரிமையாளர்கள் உறுதியளிக்க வேண்டும் காலாவதியான வாகனங்களின் ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக சரிபார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டில்லியில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 50 லட்சம் வாகனங்களின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன

இதுவரை சாலைகளில் இயக்கப்பட்ட 15,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காலாவதியான வாகனங்களை கையாள்வதற்க்கான கொள்கையை உறுவாக்குமாறு டில்லி அரசுக்கு உயர்நீதீ மன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை இயக்க உச்சநீதிமன்றம் 2018 ல் தடை விதித்தது. மேலும் உத்தரவை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்திரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 2014 ல் பிறப்பித்த உத்தரவில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை பொது இடங்களில் நிறுத்தவும் சாலைகளில் பயன்படுத்தவும் தடை விதித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.