Police Department News

அரசு அலுவலர்கள் ஜனவரி 31 க்குள் பணியிடம் மாற்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

அரசு அலுவலர்கள் ஜனவரி 31 க்குள் பணியிடம் மாற்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தேர்தல் பணி தொடர்புடைய அரசு அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தால், அவர்களை ஜனவரி 31 ம் தேதிக்குள் பணி இடம் மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு துறை செயலர்களுக்கு அவர் அனுப்பிய கடிதம்.

தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் அவர்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

ஒரே இடத்தில் 3 ஆண்டுகக்கு மேல் பணிபுரிந்தால் வரும் ஜூன் 30 ல் 3 ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும் அவர்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும்

பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும் இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின் அப்பணியில் தொடர அனுமதிக்கலாம் வேறு ஏதேயினும் காரணத்துக்காக ஒருவர் பணியில் தொடர வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்.

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் 6 மாதங்களில் ஒய்வு பெறுவதாக இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் ஆனால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாசில்தார்கள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் போன்றோர் அதே மாவட்டத்திற்குள் இடம் மாற்றம் செய்யப்படலாம் ஆனால் அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்க கூடாது.

ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை ஜனவரி 31 ம் தேதிக்குள் இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.