குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு., மீறினால் நடவடிக்கை உறுதி., டெல்லி போலீஸ் எச்சரிக்கை!!
பொதுவாக அரசு விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சி, மாநாடு உள்ளிட்டவைகளுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வருகை தருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி அரசின் அனுமதியின்றி வானில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படும்.
அந்தவகையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா டெல்லியில் கொண்டாடப்பட்ட உள்ளது. இதற்கு அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி போலீசார் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இன்று முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை வானிலில் ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், குவாட்காப்டர்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் சாதனங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது.