மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாலிபருக்கு ரீப்பர் கட்டையாள் அடித்து கொலை மிரட்டல் விட்டவர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான நேதாஜி தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் என்பவரது மகன் லோகேஸ்வரன் வயது 21/24, அதே பகுதியில் சோலை அழகுபுரத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவரது மூத்த மகள் அனுப்பிரியா என்பவரை ஐனஸ் மணி என்பவரும் பழனியம்மாளின் இரண்டாவது மகள் ராமு என்பவரை லோகேஸ்வரனின் பெரியம்மாள் மகன் சங்கிலியும் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் ஐனஸ்மணியின் மனைவி அனுப்பிரியாவிற்கும் சங்கிலிக்கும் பழக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டு அனுப்பிரியாவிடமும் சங்கிலியிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார் ஐனஸ்மணி
இந்த நிலையில் கடந்த 19 ம் தேதி சங்கிலி லோகேஸ்வரன் பணிபுரியும் இடத்திற்கு சென்று மேற்படி பிரச்சனை சம்பந்தமாக பேசுவதற்காக ஐனஸ் மணி தன்னை வரச்சொன்னதாகவும் உடன் லோகேஸ்வரனையும் அழைத்துள்ளார். இருவரும் பாரதியார் ரோட்டில் மணிகண்டன் தெருவில் நாகசுந்தரம் உட் ஒர்க்ஸ்சாப்பின் எதிரே சென்ற போது அங்கிருந்த ஐனஸ்மணி, மற்றும் அவருடன் இருந்த மன்னார் கார்த்தியும் சேர்ந்து சங்கிலியை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த ரீப்பர் கட்டையை எடுத்து சங்கிலியையும் லோகேஸ்வரனையும் அடித்துள்ளனர். அதில் லோகேஸ்வரனுக்கு மண்டை உடைந்து ரத்தம் காக்யம் ஏற்பட்டது சங்கிலிக்கு வீக்கத்துடன் காயம் எற்பட்டது இனி என் குடும்ப விசயத்தில் நீங்கள் தலையிடாதீர்கள் மீறி தலையிட்டால் கட்டையாலே அடித்து கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விட்டுள்ளார்கள் இதனை தொடர்ந்து லோகேஸ்வரன் காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின்பேரில் நிலைய குற்ற எண் 77ன்படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294(b), 324, 506(ii) படி வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.