Police Department News

திருமண உறவை தாண்டிய நட்பால், பெண் கொலைசெய்யப்பட்ட விவகாரம், விழுப்புரம் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமண உறவை தாண்டிய நட்பால், பெண் கொலைசெய்யப்பட்ட விவகாரம், விழுப்புரம் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம், காவணிப்பாக்கம் மலட்டாற்றில் நேற்று முன் தினம் மாலை, சிதைந்து எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கிடந்தது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்.

அதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸார், அந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விழுப்புரம் மற்றும்அதனையொட்டியுள்ள கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை காவல் நிலையங்களில் பெண்கள் காணாமல் போனதாக புகார்கள் வந்திருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் மாவட்டம், பண்ருட்டி புதுப்பேட்டை அருகே மோகன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்பவர், வேலைக்குச் சென்ற தன் மனைவி உமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) வீடு திரும்பவில்லை என்று புதுப்பேட்டை காவல் நிலையத்தில், மார்ச் 5-ம் தேதி புகாரளித்திருந்தது தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக மோகனிடம் விசாரணை செய்தபோது, `மார்ச் 4-ம் தேதி விழுப்புரத்தில் வீட்டு வேலைக்குச் சென்ற மனைவி, வீட்டுக்கு வரவில்லை. அதனால்தான் போலீஸில் புகாரளித்தேன்’ என்று தெரிவித்திருக்கிறார். அதையடுத்து அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், மலட்டாற்றில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலத்தை காட்டியிருக்கின்றனர். அப்போது அது தன் மனைவிதான் என்று அடையாளம் காட்டியவர், உடைந்து அழுதிருக்கிறார். அதையடுத்து உமா பயன்படுத்திய செல்போனின் கால் ஹிஸ்டரியை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து அவருக்கு அடிக்கடி போன் வந்திருப்பதும், உமாவும் அந்த எண்ணிற்கு பேசியிருப்பது தெரிய வந்தது. குறிப்பாக உமா காணாமல் போன அன்றும் அந்த எண்ணில் பேசியது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த எண்ணை பயன்படுத்தியவரை அழைத்து விசாரணை செய்தனர்.

அவர் உமாவின் ஊரான கரும்பூரை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் தெய்வக்கண்ணன் என்பது தெரிய வந்தது.

அவரிடம் விசாரணை செய்தபோது, முதலில் மழுப்பியவர், அதன் பிறகு உமாவைக் கொலைசெய்ததை ஒப்புக் கொண்டார்.

இது குறித்துப் பேசிய விசாரணை அதிகாரிகள், “உமா வீட்டு வேலைக்காக தினமும் விழுப்புரம் சென்று வந்திருக்கிறார்.

அப்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த முதியவர் தெய்வக்கண்ணனுக்கும், உமாவுக்கும் ஏற்பட்ட அறிமுகம் திருமண உறவை தாண்டிய நட்பாக மாறியிருக்கிறது.

அதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதைவழக்கமாக்கிக் கொண்டனர்.

அந்த கால கட்டங்களில் உமாவுக்கு அவ்வப்போது பணம் கொடுத்தது மட்டுமல்லாமல், மூன்று சவரன் தங்க நகைகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் உமா, தெய்வக்கண்ணனை தவிர்த்துவிட்டு, வேறு ஒருவருடன் நெருக்கமாகியிருக்கிறார்.

அதைத் தெரிந்து கொண்ட தெய்வக்கண்ணன், உமாவிடம், `நான் இருக்கும்போதே உனக்கு இன்னொருத்தனா?’ என்று கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.

அத்துடன் தான் வாங்கிக் கொடுத்த நகைகளையும், கொடுத்த பணத்தையும் திருப்பிக் கேட்டிருக்கிறார்.

அப்போது தங்களுக்குள் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார் உமா.

ஆனாலும் தெய்வக்கண்ணன் சமாதானம் ஆகவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த 4-ம் தேதி இரவு, உமாவை வழக்கம்போல காவணிப்பாக்கம் மலட்டாற்றுக்கு அழைத்துச் சென்றார் தெய்வக்கண்ணன்.

அப்போது இருவரும் மது அருந்திவிட்டு தனிமையில் இருந்திருக்கின்றனர்.

உமாவுக்கு அதிக மதுவை ஊற்றிக் கொடுத்த தெய்வக்கண்ணன், அவர் மயங்கியதும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு கிளம்பி விட்டார்.

அடுத்த நாள் அவர்கள் சாப்பிட்டுவிட்டு போட்ட சைட் டிஷ்களை சாப்பிடுவதற்காக சென்ற நாய்கள், உமாவின் உடலை கடித்துக் குதற ஆரம்பித்திருக்கின்றன.

அதையடுத்து நான்கு நாள்கள் கழித்து அங்கு சென்ற தெய்வக்கண்ணன், நாய்கள் கடித்து குதறிப் போட்டிருந்த உமாவின் உடலை தீ வைத்து கொளுத்திவிட்டு, எப்போதும் போல வேலைக்குச் சென்றுவிட்டார்” என்றனர்.

அதையடுத்து முதியவர் தெய்வக்கண்ணனை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைகு அனுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.