ரயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் வேலை.. 4,660 பணியிடங்கள்.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ரயில்வே காவலர், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.ஐ மற்றும் ரயில்வே கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்:
சப் இன்ஸ்பெக்டர் – 452 பணியிடம்
கான்ஸ்டபிள் – 4,208 பணியிடம்
கல்வித்தகுதி:
கல்வி தகுதியை பொறுத்தவரை சப் இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு அங்கீரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். கான்ஸ்டபிள் பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பள்ளிகளில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 1. 07. 2024 தேதி நிலவரப்படி, சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 20 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கான்ஸ்டபிள் பணிக்கு 18 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தளர்வு உண்டு
சம்பளம் எவ்வளவு?:
சப் இன்ஸ்பெக்டர் – 35,400/-
கான்ஸ்டபிள் – 21,700/-
விண்ணப்பிப்பது எப்படி ?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். கணிணி வழி தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாய் விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்.
எஸ்.சி / எஸ்.டி , பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆகும். முதல் கட்ட தேர்வான கணினி வழி தேர்வு எழுதிய பிறகு வங்கி கட்டண பிடித்தம் போக மீதமுள்ள தொகை விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் – 15.04.2024, விண்ணப்பிக்க கடைசி நாள்; 14.05.2024